ஸ்ரீ சங்கர மடம், திருச்செந்தூர்


ஸ்ரீ மடத்திலிருந்து ஆலய கோபுரம் தரிசனம்

தென் தமிழகத்தில் வங்காள விரிகுடாவின் வலப்பக்கத்தில் அமைந்திருக்கும் புனிதமான நகரம் திருச்செந்தூர். சுப்ரமணியப்பெருமானின் ஆலயம் மிகவும் ப்ரசித்திபெற்ற பழமையான ஒன்று. ஸ்ரீ ஆதி சங்கராசார்யாள் இந்த திருகோயிலுக்கு வருகை தந்திருக்கிறார். ஸ்ரீ ஆதி சங்கராசார்யாள் அவருடைய முருகப்பெருமானின் சுப்ரமண்யபுஜங்கம் பாசுரத்தில் முருகப்பெருமானின் கருணையையும் மற்றும் கோயில் அருகே அமைந்திருக்கும் சீரும் கடல் கரையை முருகப்பெருமானின் இருப்பிடமாகவும் மிகவும் தெளிவாக விளக்குகிறார்.

திருச்செந்தூரில் உள்ள ஸ்ரீ சங்கர மடம் மற்றும் யாத்ரி நிவாஸ் 29 மே 2008 அன்று பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்யாள் ஸ்வாமிகள் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதை குறிக்கும் வகையில் ஒரு பெயர்பலகை அங்கு அமைந்திருப்பதையும் நாம் காணலாம். ஸ்ரீ சங்கர மடம் ஹோட்டல் உதயம் இன்டர்நேஷனலை அடுத்து காவல் நிலையதிர்க்கு எதிரில் ட்ராவெல்லேர்ஸ் பங்களா ரோடில்( Travellers Bungalaw Road - TB Road) அமைந்திருக்கிறது. இங்கிருந்து 5 நிமிடத்தில் முருகப்பெருமானின் ஆலயத்திற்கு நடந்து செல்லலாம். ஸ்ரீ மடத்தின் மேல்தளத்தில் இருந்து கோயிலையும் கடற்கறையையும் நாம் முழுவதுமாக காணலாம்.

யாத்ரி நிவாஸில் தனியார் அறை, இருவர் தங்கும் அறைகள் மற்றும் ஹால் வாடகைக்கு கிடைகிறது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி 9443068099(முன்மதிக்கப்பட்ட நேரம் - மதியம் 1க்கு பிறகு)

.
ஸ்ரீ மடத்திலிருந்து ஆலய கோபுரம் மற்றும் கடற்கறை தரிசனம்.


யாத்ரி நிவாஸின் உட்புறம் - அறைகளுக்கு செல்லும் வழி


திருச்செந்தூரின் ஸ்ரீ சங்கர மடம் திறந்து வைக்கப்பட்ட பெயர்ப்பலகை

திருச்செந்தூர் இடத்தை குறிக்கும் கூகிள் வரைபடம்


View Larger Map

முக்கிய நகரம்/மாநகரங்களில் இருந்து திருச்செந்தூரின் தொலைவிடம்.

இடம் தொலைவிடம்

சென்னை 639 கிமீ
மதுரை 175 கிமீ
திருநெல்வேலி 64 கிமீ
கன்னியாகுமாரி 89 கிமீ


ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்